நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் FASTag என்ற டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறையில், வாகனத்தின் முன் கண்ணாடியில் FASTag ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சிலர் இந்த ஸ்டிக்கரை கண்ணாடியில் ஒட்டாமல் கையில் எடுத்துச் சென்று சுங்கச்சாவடியில் காட்டி கட்டணம் செலுத்துகின்றனர். இதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டாமல் கைகளில் எடுத்துச்சென்று சுங்கச்சாவடியில் காண்பிக்கப்படும் FASTagகள் Blacklist செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.