Saturday, April 19, 2025

‘தோனி’ முதல் பண்ட் வரை IPL-ன் All Time ‘பணக்கார’ வீரர்கள்..

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 18வது IPL தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்குகிறது. டெல்லி, பெங்களூரு, லக்னோ மற்றும் பஞ்சாப் ஆகிய 4 அணிகள் மட்டும் இன்னும் தங்களின் முதல் கோப்பையை முத்தமிடவில்லை.

இந்த வருடமாவது மேற்கண்ட 4 அணிகளில் ஒன்று கப்படிக்குமா? தோனி கோப்பையுடன் விடை பெறுவாரா? மும்பை மீண்டும் முரட்டு பார்முக்குத் திரும்புமா? என எக்கச்சக்கமான கேள்விகள் எழுந்துள்ளன. அதோடு புதிய கேப்டன்களின் தலைமையில் அணிகள் களம் காண்பதும், தொடரின் மீதான சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.

இந்தநிலையில் 2008ம் ஆண்டு தொடங்கி 2025 வரையிலான இந்த 18 ஆண்டுகளில், ஒவ்வொரு வருடமும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

முதல் ஏலம் 2008ம் ஆண்டு நடந்தது. இதில் கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. IPL வரலாற்றின் சிறந்ததொரு விஷயமாக இன்றும் இந்த சம்பவம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் Kevin Pietersen , Andrew Flintoff இருவரும் 9 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு, சென்னை அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

2010ம் ஆண்டு ஏலத்தில் நியூசிலாந்து வீரர் Shane Bond, வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் Kieron Pollard இருவரும் கொல்கத்தா, மும்பை அணிகளால் தலா 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டனர்.

இந்திய வீரர் கவுதம் கம்பீர் 2011ம் ஆண்டு கொல்கத்தா அணியால், 14 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். 2012ம் ஆண்டு இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை, சென்னை அணி 12 கோடியே 80 லட்சம் கொடுத்து ஏலத்தில் தூக்கியது.

2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் Glenn Maxwell மும்பை அணியால், 6 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு  வாங்கப்பட்டார். இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங் 2014ம் ஆண்டு 14 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.

தொடர்ந்து 2015ம் ஆண்டு 16 கோடி ரூபாய்க்கு, அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் Shane Watson 2016ம் ஆண்டு பெங்களூரு அணியால், 9 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் Ben Stokes 2017ம் ஆண்டு புனே அணியால் 14 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். தொடர்ந்து 2018ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை, 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

2019ம் ஆண்டு இந்திய வீரர்கள் Jaydev Unadkat மற்றும் Varun Chakravarthy இருவரும் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளால், தலா 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய பவுலர் Pat Cummins 2020ம் ஆண்டு KKR அணியால், 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் Chris Morris 2021ம் ஆண்டு, ராஜஸ்தான் அணியால் 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

இந்திய இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 2022ம் ஆண்டு, மும்பையால் 15 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். 2023ம் ஆண்டு சுட்டிக்குழந்தை Sam Curran பஞ்சாப் அணியால், 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

2024ம் ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா அணி ஆஸ்திரேலிய பவுலர் Mitchell Starcஐ, 24 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அண்மையில் முடிந்த IPL மெகா ஏலத்தில் இந்திய விக்கெட் கீப்பர் Rishabh Pant ஐ லக்னோ 27 கோடிகள் கொடுத்து தட்டித் தூக்கியுள்ளது.

இந்த 2025ம் ஆண்டு பண்ட் தான் லக்னோவை கேப்டனாக வழிநடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news