இயக்குநர் சித்திக் இயக்கத்தில், கடந்த 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ப்ரண்ட்ஸ்’. இந்த படத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, தேவயானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம், 2001 ஆம் ஆண்டில் பெரும் வரவேற்பைப் பெற்று வணிகரீதியாகவும் வெற்றிப்படமானது. குறிப்பாக இப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படம் 4K தரத்தில் நவம்பர் 21 ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

