Sunday, August 31, 2025

தன் முட்டைகளைத் தின்னும் தேரையுடன் நட்பு பாராட்டும் சிலந்திப் பூச்சி

தன் முட்டைகளைத் தின்னும் தேரையுடன் சிறந்த நட்பு பாராட்டி
அதனைப் பாதுகாத்து வருகிறது சிலந்திப் பூச்சி ஒன்று.

அதிகாலை அல்லது மாலை நேரத்தில் சிலந்திப் பூச்சிகள்
வலை பின்னும். அந்த நேரத்தில்தான் நிறைய பூச்சிகள்
பறந்துதிரியும். அந்தப் பூச்சிகளின்மீது தன் விஷத்தைப்
பாய்ச்சிக் கொன்று அவை இறந்த பிறகு, அந்தப் பூச்சிகளைப்
பிடித்து உண்ணும்.

தேரைகளின் உணவு என்ன தெரியுமா?

புல், கூழாங்கல் போன்றவற்றில் மறைந்திருந்து தன் இரைகளைப் பிடித்து
உண்பது தேரைகளின் வழக்கம். அந்த வகையில் சிலந்திப் பூச்சிகளின்
முட்டைதான் தேரைகளுக்குப் பிரதான உணவு.

அத்துடன் விஷத்தேனீ, வண்டு, கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி,
நத்தை, எறும்பு போன்றவற்றையும் பிடித்து உண்ணும்.

ஆனால், விதிவிலக்காக சிலந்திப் பூச்சி ஒன்றும் தேரை ஒன்றும்
கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார்போல சிறந்த நட்புடன் உள்ளன.
இயற்கையின் விநோதமான இந்த நட்பு எந்தளவுக்கு நீடிக்கிறது தெரியுமா…

இவையிரண்டும் சேர்ந்தே தங்களின் வேலைகளைச் செய்துவருகின்றன.
தேரையைப் பிற உயிரினங்கள் கொல்ல முயன்றால், அவற்றிடமிருந்து
தேரையைக் காப்பாற்றிவருகிறது இந்த சிலந்திப் பூச்சி.

இந்த அரிய நட்பு பற்றிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது-

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News