Saturday, May 17, 2025

வறுத்த பூண்டை சாப்பிட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் இது நடக்கும்

பூண்டு என்பது ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருளாகும். இதனை உணவில் சேர்த்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக வறுத்த பூண்டை சாப்பிடும்போது 24 மணி நேரத்துக்குள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.

பூண்டை பச்சையாக சாப்பிடும்போது உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் குறைக்க உதவும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் பணியையும் செய்கிறது.

Also Read : ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் வாட்டரை நேரடியாக குடிப்பது நல்லதா?

வறுத்த பூண்டை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் செரிமானம் ஆகி உடலுக்கு நல்ல உணவாக மாறும். 4 முதல் 6 மணி நேரத்துக்குள் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, தேவையற்ற நீர் வெளியேற ஆரம்பிக்கும். இதில் தேங்கியுள்ள கொழுப்புகளும் கரைய தொடங்கும்.

6 முதல் 7 மணி நேரத்துக்குள் பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் இரத்த நாளங்களில் சென்றடைந்து, உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும்.

இவை தவிர, ரத்த அழுத்தத்தை சீராக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும், எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும். அதனால், தினமும் ஒரு சில வறுத்த பூண்டுகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Latest news