Sunday, January 25, 2026

இந்த உண்மை தெரிந்தால் இனி பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிடமாட்டிங்க

பிரெஞ்சு ப்ரைஸ் எனப்படும் எண்ணையில் பொறித்த உருளைக்கிழங்கை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற பொறித்த உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும். இவை ரத்த அழுத்தம் மற்றும் இதய ரத்தக் குழாய்களை பாதிக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும்.

பிரெஞ்சு ப்ரைஸ் உட்கொள்வது கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிடுபவர்களுக்கு கவலை 12% வரையிலும், மனச்சோர்வு 7% வரையிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உருளைக்கிழங்கை எண்ணெயில் பொறிக்கும்போது ‘அக்ரிலமைட்’ என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இந்த வேதிப்பொருள் உடல்நலப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 

பொறித்த மாமிசம் உண்பவர்களை விட  பொறித்த உருளைக்கிழங்கை உண்பவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொறித்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதை தவிர்க்குமாறு ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related News

Latest News