திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர். ரிதன்யா தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என ரிதன்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரிதன்யாவின் பிறந்த நாளான இன்று, அவரது தந்தை அண்ணாதுரை மற்றும் குடும்பத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ ரிதன்யா பெயரில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட உள்ளதாக அவரது பெற்றோர் அறிவித்துள்ளானர்.
இது குறித்து ரிதன்யாவின் பெற்றோர் பேசியில்,” எதிர்காலத்தில் ரிதன்யா சமூகசேவை அறக்கட்டளை மூலம் இலவச சட்ட ஆலோசனை மையம் திறக்கப்படும், அதில் இலவசமா சட்ட பூர்வமாக அனைத்து ஆலோசனைகளும் நடத்தப்படும் என்றும், ரிதன்யா பெயரில் வரதட்சணை மற்றும் குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, அந்த பிரச்சனை முடியும் இந்த கேபிள் சேவை மையம் கூட இருக்கும்.
மேலும், மக்களுக்கு எங்களை முடிந்த அளவுக்கு சேவை செய்வோம், இது எங்களோட முதல்கட்டப்பணி தெரிவித்தார்,மேலும் ரிதன்யா சமூகசேவை அறக்கட்டளை மூலம் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படும்” என்று குறிப்பிட்டனர்.