Monday, September 1, 2025

உத்தரப்பிரதேசத்தில் போலி காவல்நிலையம் நடத்திய மோசடி கும்பல் கைது

உத்தர பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரை காசியாபாத் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.

இந்நிலையில், நொய்டாவில் மோசடி கும்பல் ஒன்று சர்வதேச காவல் நிலையம் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை அலுவலகம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அரசு அதிகாரிகளைப் போல நடித்தும், போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைகள் மற்றும் போலீசாரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News