உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை நடந்த சாலை விபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் உத்தரகண்ட் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத், மயிரிழையில் உயிர் தப்பினார்.
மறைந்த உதய் சோனிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு டெல்லியில் இருந்து டேராடூன் செல்லும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் ஹரிஷ் ராவத் காயமின்றி உயிர் தப்பினார், இருப்பினும் அவரது வாகனம் சேதமடைந்தது.
விபத்தை அறிந்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, ஹரிஷ் ராவத்தை உடனடியாக தொடர்பு கொண்டு நலன் விசாரித்தார். இதையடுத்து தமது எக்ஸ் வலைதள பதிவில் அனைவருக்கும் நன்றி கூறிய ஹரிஷ் ராவத். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை, கார் மட்டும் சேதம் அடைந்து என்று தெரிவித்துள்ளார்.
