டெல்லி யூகோ வங்கியில் தலைவராக சுபோத் கோயல் பணியாற்றி வந்தார். அவர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 6210 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கொல்கத்தா சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பிறகு இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு சென்றது. இந்த குற்றச்சாட்டின் பேரில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் யூகோ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குனரான சுபோத் குமார் கோயலை கைது செய்தனர்.
சுபோத் குமார் கோயல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மே 21 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.