பிஜூ ஜனதா தளத் தலைவரும், ஒடிசா மாநில முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முந்தினம் இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.