மதுரை திருமங்கலம் -கொல்லம் சாலையில் 4 வழிச் சாலை பணிகளால் விபத்துகள் அதிகமாக நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் விபத்துகளைத் தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் ஆர்.பி. உதயகுமாரும் கைது செய்யப்பட்டார்.