மேகாலயா முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் காலமானார்

மூத்த அரசியல் தலைவரும், மேகாலயா முன்னாள் முதல்வருமான டி.டி. லபாங்(93) காலமானார்.

நீண்ட காலமாக வயது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வருக்கு திங்கள்கிழமை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

1972ஆம் ஆண்டு சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்று சட்டப்பேரவையில் நுழைந்த அவர், நான்கு முறை வடகிழக்கு மாநிலத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

Related News

Latest News