Monday, July 21, 2025

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரளாவின் முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் (வயது 102) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

நெஞ்சுவலி காரணமாக கடந்த ஜூன் மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

வி.எஸ். அச்சுதானந்தன் கேரளத்தின் 11வது முதலமைச்சராக இருந்தார். 2006 முதல் 2011 வரை முதலமைச்சராகப் பணியாற்றினார். கேரளாவில் மூன்று முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news