கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கவலைக்கிடம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் கேரளாவின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் (வயது 101) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் நேற்று முன்தினம்  திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த மருத்துவமனை தரப்பில் இன்று (ஜூன் 25) வெளியிடப்பட்ட அறிக்கையில், அச்சுதானந்தனின் உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை எனவும், தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News