Wednesday, December 17, 2025

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் உடல் நலக்குறைவால் இன்று டில்லியில் காலமானார். அவருக்கு வயது 79.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக், உடல்நலக்குறைவு காரணமாக டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். இவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட போது ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் ஒடிசா, பீஹார், கோவா, மேகலாயா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநராக பணியாற்றி உள்ளார்.

Related News

Latest News