இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கா்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கா்நாடக மாநில போலீஸாா் கூறுகையில், ‘காவிரி ஆற்றங்கரையில் ஐயப்பனின் இருசக்கர வாகனம் கண்டறியப்பட்டது. அவா் ஆற்றில் குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது உயிரிழப்புக்கு காரணம் முழுமையான விசாரணைக்குப் பிறகே தெரியவரும்’ என்றனா்.