Thursday, July 31, 2025

விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் பயணம்

குஜராத் மாநிலத்தில் 242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நிலைமை என்ன ஆனது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News