குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விமான விபத்தில் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 68.

குஜராத் மாநிலத்தில் 242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி பயணம் செய்த நிலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விமான விபத்தில் முன்னாள் முதலமைச்சர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News