புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் ஒப்பந்தக்காரரை ஆபாசமாக பேசியதோடு அரிவாளை ஓங்கிய முன்னாள் திமுக எம்எல்ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் ரூ 2.59 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையத்திற்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அதனை அறந்தாங்கி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கு வந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் தன்னை ஏன் அந்த விழாவிற்கு அழைக்கவில்லை என ஆத்திரத்தோடு பேசியதோடு அந்தக் கட்டடிடம் கட்டும் ஒப்பந்தக்காரரை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். மேலும் தேங்காய் உடைக்கும் அரிவாளால் கோபத்தில் வெட்ட ஓங்கும் காட்சிகளும் வெட்டி விடுவேன் என கூறும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.