முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் (87) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஷ் தொடரின் 2 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் ஆகும்.
ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட இவர் 25வது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிவிட்டார். கோர்டன் ரோர்க் ஆஸ்திரேலியாவின் மிக வேகமான பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்பட்டார்.