ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் டால்மியா சிமென்ட் நிறுவனத்துக்கு சொந்தமான 800 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், தற்போது ஜெகன் ரெட்டிக்கு சொந்தமான 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.