அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் நகர்மன்ற முன்னாள் தலைவருமான கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்தது குறித்து கார்த்திக் தொண்டைமான் செய்தியாளர்களுடன் பேசுகையில், “அதிமுகவில் மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக கட்சி போகிற போக்கே சரியில்லை” என்று தெரிவித்தார்.