“அதிமுக முன்னாள் நிர்வாகி தான் கொக்கைன் பழக்கத்தை கற்றுத்தந்தார்” – ஸ்ரீகாந்த் வாக்குமூலம்

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகி தான் கொக்கைன் பழக்கத்தை கற்றுத்தந்தார் என ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது : ‘தீங்கிரை’ என்ற படத்திற்காக பிரசாத் தனக்கு ரூ.10 லட்சம் தர வேண்டி இருந்தது. பணத்தைக் கேட்கும் போதெல்லாம் பிரசாரத் கொக்கைன் வாங்கித் தருவார். 2 முறை பயன்படுத்திய பின்னர், 3-வது முறை நானே கொக்கைன் கேட்கும் நிலை ஏற்பட்டது. வேறொரு வழக்கில் பிரசாத்தை கைது செய்வதற்கு முன்பு கால் கிலோ கொக்கைன் கொடுத்தார் என ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Latest News