வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் எல்.கே.எம்.பி.வாசு. அ.தி.மு.க. முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளரான இவர், 1991-ம் ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளராகவும், 96-ம் ஆண்டு வேலூர் நகரசபை அ.தி.மு.க. குழு தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், எல்.கே.எம்.பி.வாசு சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். அப்போது எல்.கே.எம்.பி.வாசு, விஜய்க்கு எம்.ஜி.ஆர். புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழக வேலூர் மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
