குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின்கீழ், வெளிநாட்டினரை கையாள்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேசவிரோத செயல்கள், உளவு பார்த்தல், கொலை, பயங்கரவாத செயல்கள், குழந்தை கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரை இந்தியாவில் நுழையவோ, இந்தியாவில் தங்கி இருக்கவோ அனுமதி மறுக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய வெளிநாட்டினரை நாடு கடத்தும் வரை அவர்களது நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்க வேண்டும் என்றும் இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் வெளிநாட்டினரை தடுத்து, திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.