இந்த உணவுகளை சாப்பிடுங்க…முகப்பருவிற்கு முற்றுப்புள்ளி வைங்க!

166
Advertisement

எண்ணெய் பசை, கிருமிகள், காற்று மாசு என முகப்பருக்கள் வருவதற்கு பல காரணிகள் இருந்தாலும், நாம் உண்ணும் சரியான உணவு வகைகளால் அவற்றின் தீவிரத் தன்மையை குறைக்க முடியும்.

ஆப்பிள் பழத்தில் உள்ள பெக்டின் என்ற உட்பொருள் சருமத் தடிப்புகளை சரி செய்வதோடு கிருமித் தொற்றுகளினால் வரும் பருக்களையும் குறைக்க உதவும்.

செலினியம் நிறைந்த முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உலர் பழங்களை சாப்பிடுவதால் சருமம் புற ஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கப்படுவதோடு முகப்பரு வருவதும் தடுக்கப்படுகிறது.

வால்நட் கொட்டையில் உள்ள லெனோலிக் அமிலம் சருமத்தை மென்மையாக்கி பரு வரும் சூழலை தடுக்கிறது. உள் இருந்து சரும மாசுக்களை சுத்தம் செய்யும் நல்ல பாக்டீரியா கொண்ட தயிரை தொடர்ந்து உட்கொள்வது சிறப்பான சரும ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.

Blue Berry, ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்கள் சருமத்திற்கு தேவையான பைட்டோ கெமிக்கலை வழங்கி பருக்களை விரட்ட துணையாக அமைகிறது.

சரும நலனுக்கு உகந்த மஞ்சள் மற்றும் சிவப்பு நிற காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 

A,B மற்றும் C விட்டமின்கள் நிறைந்த தர்பூசணி பழம் சரும வறட்சியை போக்கி பருப் பிரச்சினைக்கும் தீர்வாக விளங்குகிறது.

பூசணி விதையில் உள்ள குக்குர்பிடசின், விட்டமின் E மற்றும் கரோட்டினாய்டுகள் சருமத்துளைகளில் உள்ள மாசை அகற்றி முகப்பருக்கள் வருவதை தடுக்க ஏதுவாக அமைவது குறிப்பிடத்தக்கது.