தூக்கமின்மை, மனஅழுத்தம், வேலை நெருக்கடி போன்ற காரணிகளால் தூக்கம் குறைவடையும் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வாக சில உணவுகள் தூக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
கிவி பழத்தில் உள்ள வைட்டமின் பி, செரோடோனின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தூக்க தரத்தை உயர்த்த உதவுகின்றன. எனவே இரவு தூங்கும் முன் இரண்டு கிவிப்பழம் சாப்பிடுவது தூக்கத்தை மேம்படுத்தும்.
பாதாம் தூக்கத்தை ஊக்குவிக்கும் குணங்களைக் கொண்டது. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் மெலடோனின் ஹார்மோன்களின் செயல்பாட்டை மேம்படுத்தி நல்ல தூக்கத்தை தரும்.
பால், பாதாம், பருப்பு, வாழைப்பழம் இவற்றில் கிரிப்டோஃபென் என்ற அமினோ அமிலம் மற்றும் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியை ஊக்குவித்து ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த உதவுகின்றன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி நிறைந்த சால்மன், மூளையின் செயல்பாடு மற்றும் தூக்க தரத்தை மேம்படுத்தும்.