சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு டீ, காபி ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இதில், டீ ரூ.15, காபி ரூ. 20 என உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு டீ, காபி பிரியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சென்னையை தொடர்ந்து தற்போது கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. இதில், டீ ரூ. 20, காபி ரூ. 26, பிளாக் டீ உள்ளிட்டவை ரூ. 17 என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சாலையோர மற்றும் பேருந்து நிலைங்கள் ஆகியவற்றில் செயல்படும் டீ கடைகளில் உயர்த்தப்பட்டுள்ளது.
இதில், சென்னையுடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூரில் டீ மற்றும் காபி உள்ளிட்டவற்றின் விலை சற்று அதிகமாகவே உள்ளது.