கார்த்திகை தொடர் முகூர்த்தங்கள் மற்றும் விஷேச நாட்களை முன்னிட்டு அனைத்து வகையான பூக்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூபாய் 2,000- க்கும், ஜாதிமல்லி ரூபாய் 1,200- க்கும், முல்லை ரூபாய் 800- க்கும், காக்கட்டான் ரூபாய் 550- க்கும், சின்ன நந்தியாவட்டம் ரூபாய் 1,500- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
