சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே விடிய, விடிய பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
317 பயணிகளுடன் தோகாவிலிருந்து வந்த விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு திரும்பிச் சென்றது. துபாய், லண்டன், சார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்து தாமதமாக சென்னையில் தரையிறங்கின.
சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
