6 நாட்களில் 66 முறை ரத்து செய்யப்பட்ட விமான சேவை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12 ம் தேதி 242 பயணிகளுடன் லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒட்டுமொத்தமாக 274 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்து 6 நாட்கள் கடந்துவிட்டது. இந்த 6 நாட்களில் மொத்தம் 66 போயிங் 787-8 டிரீம்லைனர் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Related News

Latest News