சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இன்று காலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. ஓடுபாதையே தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக இருந்தது.
இதன் காரணமாக மும்பையில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. கொழும்பு, டெல்லி, துபாய் செல்லும் விமானங்களும் 20 நிமிடங்கள் தாமதமாகவே புறப்பட்டன.