பெண்ணிற்கு அதிர்ச்சி தந்த விமான பயணம்

347
Advertisement

விமான பயணத்தின் பொது , விமானத்தில் தான் மட்டும் தான் பயணம் செய்கிறோம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்ணிற்கு நடந்த சுவாரசியமான நிகழ்வு இணையத்தில் வைரலாகியது

கொரோனோ கட்டுப்பாடுகள் விமானப் பயணத்தில் தளர்த்தப்படுவதால் , மக்கள் மீண்டும் விமானங்களில் பயணம் செய்ய தொடக்கி உள்ளனர்.

நார்வேயில் உள்ள ரோரோஸுக்குச் செல்லும் விமானத்தில், அரோரா டோரஸ் என்ற பெண் ஒருவர் முன்பதிவு செய்தார். பயணத்தின் பொது தான் தெரிந்தது அந்த விமானத்தில் அவர் மட்டும் தான் முன்பதிவு செய்திருந்தது . இதை அறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

அதிர்ச்சி அடைந்த அவருக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்தனர் அந்த விமான ஊழியர்கள். சிங்கிள் ஆகா பயணித்த அந்த பெண்ணை விமான ஓட்டியின் அறையில் உள்ள இருக்கையில் அமர விரும்புகிறீர்களா என கேட்ட விமான பணிப்பெண் , அவரை அழைத்து சென்று விமானியின் பின் இருக்கையில் உட்காரவைத்தார்.

https://www.instagram.com/p/CarloAWgUOD/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

வாழ்நாளில் எந்த விமானப்பயணிக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் கிடைத்ததில் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தார் அந்த பெண்.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அதில் , தனது 10/10 சதவீத அனுபவம் இது . தனக்குப் பிடித்த புதிய விமான நிறுவனமாக மாறிவிட்டது இது எனவும் தெரிவித்து உள்ளார்.

இரண்டு விமானிகளுக்குப் பின்னால் ஹெட்செட்டுடன் அமர்ந்த அவர் முன் ஜன்னல் வழியாக நேரடியாக வானிலிருந்து பார்த்து ரசித்த அவர் , “நான் ஏறும் போது எனக்கு செய்தி கிடைத்தது, நான் மட்டுமே பயணி, விமான பணிப்பெண் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தார், நாங்கள் ஒருவரையொருவர் அறியாமல் சிறிது நேரம் பேசினோம்.

பயணம் 50 நிமிடங்கள் நீடித்தது. கடைசி 30 நிமிடங்கள் மற்றும் தரையிறங்கும் போது விமானி அறையில் உட்கார விரும்புகிறீர்களா என்று என்னிடம் பணிப்பெண் கேட்டார். என பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.