உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான வெள்ளத்தில் பல வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
உத்தரகாண்டில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹர்ஷில் பகுதியின் தரலி கிராமத்தின் பாதி பகுதி அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பலர் காயமடைந்திருக்கலாம் அல்லது அதில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.