Friday, December 27, 2024

இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தா இதய நோய் இருக்கலாம்! மக்களே உஷார்

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பதிவாகும் மொத்த இறப்புகளில் 24.8 சதவீதம் மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியாவில் இதய நோயோடு வாழும் மனிதர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. இதய நோய் பாதிப்பை முன்னரே கண்டறிய உதவும் சில அறிகுறிகளை இப்பதிவில் பார்ப்போம்.

இரவு நேரத்தில் மூச்சு விடுவதில் சிரமம் அல்லது நடக்கும் போது அதிக சோர்வு மற்றும் மூச்சுவாங்குதல் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய இதய நோய் அறிகுறிகள் ஆகும்.

பெலவீனமான இதயத்தால் இரத்தத்தை சரியாக வெளியேற்ற முடியாது. இதனால், தலைசுற்றல் ஏற்படலாம். இதய ஆரோக்கியம் பின்தங்கி இருக்கும் போது படபடப்பான உணர்வு அடிக்கடி வருவது இயல்பு.

இதய நோயால் திசுக்களில் தண்ணீர் சேர்ந்து பாதம், கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும். இதயத்தின் செயல்திறன் குறைபாட்டின் தாக்கத்தால் சிறுநீரகத்தின் சீரான செயல்பாடு குறைந்து சிறுநீர் வெளியேற்றம் குறைவாக இருக்கும்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற்றால் தீவிரமான விளைவுகளை தவிர்க்கும் சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Latest news