இந்த நாட்களில் ஐந்து கோள்களை வெறும் கண்ணால் பார்க்கலாம்

200
Advertisement

வானவில், கோள்கள், வால் நட்சத்திரங்கள், நிலா, விண் கற்கள் என விண்வெளி சார்ந்த பல விஷயங்களும், என்றும் மனிதனை அதிசயிக்க வைக்க தவறுவதே இல்லை.

இந்த மாதமும், நம் கண்களுக்கு விருந்தாக ஒரு பரிசளிக்க காத்திருக்கிறது இயற்கை.

சூரிய குடும்பத்தின் முக்கியமான ஐந்து கோள்களான புதன், வெள்ளி, பூமி, வியாழன் மற்றும் சனி, ஜூன் 17 முதல் 27 வரை ஒரே கோட்டில் இருப்பது போல காட்சி அளிக்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

நியூ யார்க், லண்டன் போன்ற நாடுகளில் ஐந்து கோள்களும் தெளிவாக தெரியும் என்றாலும், உலகின் அனைத்து நாடுகளில் இருந்துமே இரண்டு கோள்களையாவது காண முடியும்.

சூரியன் மறைவதற்கு அரை மணி நேரத்திற்கு முன், வானில் வெறும் கண்களாலேயே கோள்களை காண வாய்ப்புள்ளது என கூறும் விஞ்ஞானிகள், தொலைநோக்கி உதவியுடன் பார்ப்பது மேலும் சிறப்பான அனுபவத்தை தரும் என கருத்து தெரிவிக்கின்றனர்.

இதே போல ஒரு அரிய நிகழ்வு 2004ஆம் ஆண்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.