ஆந்திரப் பிரதேசத்தில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் டாகு மகாராஜ் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதியில் வெளியானது. அப்போது தியேட்டர் வாசலில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் உயிருள்ள ஆட்டை பலிகொடுத்து கொண்டாடினர். இந்த சம்பவத்தை விடியோ எடுத்து சமூக ஊடகங்களிலும் பரப்பினர்.
இது தொடர்பாக அவர்கள் மீது விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இறைச்சிக் கடைகள்தவிர, பொது இடங்களில் விலங்குகள் கொல்லப்படுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.