Saturday, December 27, 2025

பீகாரில் நாளை 121 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நாளை மற்றும் 11ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாளை நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 314 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி என பல்வேறு தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related News

Latest News