சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலையில், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பழைய ரயில் இன்ஜின்கள் நீக்கப்பட்டு புதிய ஹைட்ரஜன் ரயில் இன்ஜின்கள் பல வழித்தடங்கள் அறிமுகமாக உள்ளது.
இந்நிலையில், சென்னை, ஐ.சி.எப்.,யில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது : ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது. கார்பன் வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக ஹைட்ரஜன் ரயில்கள் இருக்கும். ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றும்” என்றார்.