டெல்லியில் பிஷம்பர் தாஸ் மார்க்கில் உள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தும் இடத்தில ஏற்பட்ட இந்த தீ விபத்து மேலே உள்ள தளங்களுக்கும் பரவியது. உடனே உள்ளிருந்த மக்கள் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் மூன்று பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
