Sunday, December 28, 2025

மதுரையில் ஏடிஎம் மையத்தில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் எரிந்து நாசம்

மதுரை மாநகர் கீரைத்துறை அருகே உள்ள புது மாகாளிப்பட்டி பகுதியில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை திடீரென ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறி உள்ளது 

பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவ தொடங்கி ஏடிஎம் இயந்திரம் முழுவதிலும் எரிந்துள்ளது. இதையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் அனுப்பானடி தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏடிஎம் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர் 

ஏடிஎம் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கு ஏசியில் ஏற்பட்ட மின்கசிவாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து குறித்து கீரைத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர் 

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஏடிஎம் இயந்திரம் முழுவதுமாக இருந்ததோடு அதில் வைக்கப்பட்டிருந்த பணமும் எரிந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News