திண்டுக்கல்லில் உள்ள ஆவின் பாலகத்தில் தீ விபத்து

திண்டுக்கல்லில் உள்ள ஆவின் பாலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின.

திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் அருகே, விவேக் என்பவர் நடத்தி வரும் ஆவின் பாலகத்தில், இரவு 11 மணிக்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு படையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விபத்தில், 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் முற்றிலும் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார், மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது கேஸ் சிலிண்டர் லீக் காரணமாக விபத்து ஏற்பட்டதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News