Monday, May 12, 2025

சென்னை தி.நகரில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஷோபா டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து அப்பகுதியில் கரும்புகையாக காட்சி அளிக்கிறது. சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது பற்றி தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Latest news