Friday, August 8, 2025
HTML tutorial

ஃ பியோனா வாசிப்பில் கலக்கும் நாய்

நாய் ஒன்று ஃபியானோ வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

செல்லப்பிராணிகளுள் முதலிடம் வகிக்கும் நாய்கள் மனிதர்கள் செய்யும்
செயல்களைப் பார்த்து அப்படியே செய்யக் கற்றுக்கொள்கின்றன.
மனிதர்களின் குடும்ப உறுப்பினர்கள்போல செயல்படும் அந்த ஜீவன்கள்
தங்கள் எஜமானர்களின் பழக்க வழக்கங்களை அப்படியே செய்யக்
கற்றுக்கொள்கின்றன.

அந்த வகையில் நாய் ஃபியானோ வாசிப்பதை இசைக்கலைஞர் ஒருவர்
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மெய்ம்மறந்து நாயொன்று ஃபியானோ வாசித்து
மனிதர்களை மிஞ்சிவிட்டது. ஒருவேளை சிறந்த பாடகர் ஆக முயற்சிசெய்கிறதோ?

செல்லப்பிராணிகளுடன் சிறிதுநேரம் செலவிடுவது சிறந்த பொழுதுபோக்காகவும்
மகிழ்ச்சியாகவும் அமையும். நாய்களின் குறும்புத்தனங்களும் முட்டாள்தனமான
செயல்களும் நம்மை ரசிக்க வைக்கும்.

நீங்களும் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்து மகிழுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News