சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் நடைமேடை டிக்கெட்டுடன் நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் காத்து இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனைக்கு வரும் பலர் ரயில் நிலைய நடைமேடை அனுமதி டிக்கெட் எடுத்துக்கொண்டு விரைவு ரயில் பகுதியில் தூங்குகின்றனர். இப்படி நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி உண்டு என கூறப்பட்டுள்ளது.