Wednesday, July 2, 2025

ரூ.1,000க்கு பதிலாக ரூ.10,000 அபராதம் – விரைவில் வருகிறது புதிய ரூல்ஸ்

வாகன விதிமீறல்களுக்கான அபராதத் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

ஹெல்மெட் இல்லாமல் பைக் அல்லது ஸ்கூட்டர் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தாலும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். வாகனம் ஓட்டும்போது மொபைல் போனில் பேசினால் ரூ.500 ஆக இருந்த அபராதம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500க்கு பதிலாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். வாகனங்களில் அதிக சுமை ஏற்றினால் ரூ.2,000க்கு பதிலாக ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கான அபராதம், முன்பு ரூ.1000-1500 ஆக இருந்தது, தற்போது ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 6 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

பைக் ஓட்டுநர் சாகசங்கள் செய்தாலோ அல்லது ஆபத்தான முறையில் ஓட்டினாலோ ரூ.500க்கு பதிலாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news