மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரீல்ஸ் எடுத்து இணையத்தில் பகிர்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பார்கள் என்றும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் எனவும் கூறியுள்ளனர்.