மத்திய பிரதேச மாநிலத்தின் ஜஹாங்கிராபாதில் துணை காவல் ஆய்வாளராக (டிஎஸ்பி) பணிபுரிபவர் கல்பனா ரகுவன்ஷி (56). இவருடைய தோழியான பிரமிளா திவாரியும் நீண்டகால நண்பர்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் செப்டம்பர் 24 ஆம் தேதியில் பிரமிளா வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டுக்குள் நுழைந்த கல்பனா, பிரமிளாவின் பணப்பையிருந்து ரூ. 2 லட்சம் பணத்தையும், மொபைல் போனையும் திருடியுள்ளார்.
இதையடுத்து கல்பனா மீது காவல் நிலையத்தில் பிரமிளா புகார் அளித்தார். டிஎஸ்பி கல்பனா மீது போலீசார் திருட்டு வழக்கை பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
