மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள முகாலய மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி அந்த நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் போலீசார் உட்பட பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர். இதுகுறித்து நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்த பெண் காவலரை இருளைப் பயன்படுத்தி சிலர் தகாத இடங்களில் தொட முயன்றனர். மேலும் அவரது உடையைக் களைய முயற்சித்துள்ளனர் என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.